ஹலால் உணவு சான்றிதழை போல வந்துவிட்டது சைவ உணவுக்கான "சாத்விக் சைவம்" சான்றிதழ்!
ஒவ்வொருவரும் உயிர்வாழ உணவு மிக அவசியமான ஒன்றாகிறது. இந்நிலையில், ஹலால் உணவுக்கு சான்றிதழ் தரப்பட்டுவந்த நிலையில் தற்போது சைவ உணவுகளுக்கும் சான்றிதழ் தரும் சாத்விக் முறை டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.
உலகிலேயே முதல் முறையாக சைவ உணவிற்காக வழங்கப்படும் சான்றிதழ் இதுவாகும். இது சாத்விக் சத்துவம்', 'சாத்விக் சைவம்', 'சாத்விக் சைவம்' மற்றும் 'சாத்விக் ஜெயின் நான்கு பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
இதன் முக்கிய நோக்கம் இந்தியா மற்றும் உலக அளவில் சைவ உணவுக்கான சுமூகமான சூழலை உருவாக்குவதாகும். இதுகுறித்து இந்திய சாத்விக் கவுன்சிலின் நிறுனவர் அபிஷேக் கூறும் போது
"எங்களின் நோக்கம் சைவ உணவை ஊக்குவிப்பது அல்ல. அதற்கு மாறாக சைவ உணவுகளின் தரத்தை உறுதி செய்வதாகும். இதுவரை சாத்விக் 170 நாடுகளில் செயல்படுகிறது" என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் கன்ங்கவார் மற்றும் சாத்விக் அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.